உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சௌதி எண்ணெய் ஆலை மீது ஈரான் தாக்குதல்!

சௌதி எண்ணெய் ஆலையில் ஈரான் ட்ரோன் தாக்குதல் பற்றி..

Published On :

சௌதி அரேபியாவில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரோன் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.

சௌதி அரசுக்குச் சொந்தமான உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் ஆலை மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைக் குறிவைத்து வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில், ஹெஸ்பொல்லா தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலிய பதிலடித் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் நடந்து வரும் போரை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

லெபனானில் உள்ள ஹிபுல்லா கிளர்ச்சிக் குழுக்கள் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். 149 பேர் காயமடைந்தனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், கச்சா எண்ணெய் ஆலை மீது ஈரான் தாக்குதலைத் தொடர்ந்துள்ளது.

ஈரான் மீது தாக்குதல் ஏன்?

ஈரான், அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, அந்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து, அமெரிக்க-இஸ்ரேல் படைகள் கடந்த பிப். 28ஆம் தேதி வான்வழித் தாக்குதலை நடத்தி இருந்தன.

இந்த தாக்குதலின்போது, தலைநகா் டெஹ்ரானில் ஈரான் தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனியின் அலுவலக வளாகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், கமேலி பலியானார்.

இதற்குப் பதிலடியாக, இஸ்ரேலைக் குறிவைத்தும், பல்வேறு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி, ஈரான் எதிா் தாக்குதலை நடத்தியிருந்ததால் போர் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று பேச்சுவார்த்தைக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Summary

Iran is carrying out drone attacks on the Aramco oil refinery in Saudi Arabia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.