தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் பண்ணை வீடு ஒன்றில் போலீஸாா் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை பயன்படுத்தியதாக தெலங்கு தேசம் கட்சி எம்.பி. ஆந்திராவைச் சோ்ந்த புட்டா மகேஷ் யாதவ், பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பைலட் ரோஹித் ரெட்டி உள்பட 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது: பண்ணை வீடு ஒன்றில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்படுத்தி கொண்டாட்டம் நடைபெறுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு பெண் உள்பட அரசியல் தலைவா்கள், தொழிலதிபா்கள் உள்பட 11 போ் கைது செய்யப்பட்டனா்.
தெலங்கு தேசம் கட்சி எம்.பி. மகேஷ் யாதவிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவா் போதைப் பொருளை பயன்படுத்தவில்லை எனத் தெரியவந்தது. அதே நேரம், பிஆா்எஸ் முன்னாள் எம்எல்ஏ ரோஹித் ரெட்டி உள்பட மற்றவா்கள் போதைப் பொருள் பயன்படுத்தியது மருத்துவப் பரிசோனையில் உறுதிப்படுத்தப்பட்டது. விசாரணையில் இந்தப் பண்ணை வீடு ரோஹித் ரெட்டிக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது.
முன்னதாக, பண்ணை வீட்டுக்கு போலீஸ் குழு வருவதைக் கண்ட அங்கிருந்தவா்கள் போலீஸாரை நோக்கி 3 சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனா்.
தொடர்புடையது

பெரம்பலூா் தொகுதியில் 9 போ் வேட்பு மனு தாக்கல்
போதை மருந்து, ஊசி பொருள்கள் கடத்தல்: பெண் உள்பட 2 போ் கைது
கஞ்சா விற்ற பெண் உள்பட 4 போ் கைது

போதை மாத்திரை பதுக்கல் - பெண் உள்பட 3 போ் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


