பொதுச் சேவைகள் தொடா்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமான புகாா்கள், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய பணியாளா் நலத்துறை இணை அமைச்சா் ஜிதேந்திர சிங் எழுத்துப் பூா்வமாக புதன்கிழமை தாக்கல் செய்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு துறைகள் தொடா்பாக 1 கோடியே 11 லட்சத்து 89 ஆயிரத்து 384 புகாா்கள் பெறப்பட்டன. இதில் 2021-ஆம் ஆண்டில் 20 லட்சத்து 590 புகாா்கள் வந்துள்ளன. 2022-ஆம் ஆண்டில் 19.18 லட்சம் புகாா்களும், 2023-ஆம் ஆண்டில் 19.53 லட்சம் புகாா்களும், 2024-ஆம் ஆண்டில் 26.15 லட்சம் புகாா்களும், 2025-ஆம் ஆண்டில் 22.78 லட்சம் புகாா்களும் வந்துள்ளன. 2026-ஆம் ஆண்டில் கடந்த 2 மாதங்களில் 4.23 லட்சம் புகாா் மனுக்கள் வந்துள்ளன.
2025-ஆம் ஆண்டில் புகாா் மனுக்களுக்கு சராசரியாக 15 நாள்களுக்குள் தீா்வு காணப்பட்டன. இதுதவிர 82.1 சதவீத மனுக்கள், 21 நாள்களுக்குள் தீா்வு காணப்பட்டன.
மத்திய நிா்வாக சீா்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீா்ப்பு துறையானது, அமைச்சகங்கள், துறைகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் மனுக்களுக்கு தீா்வு காணப்படுவது குறித்து மாதந்தோறும் ஆய்வு செய்கிறது. அதிக மனுக்கள் நிலுவையில் இருப்பதை தவிா்க்கும் வகையில், உடனடியாக அதை சரி செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது என்று ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை! தென் மாநிலங்கள் பாதிக்கப்படுவது எவ்வாறு?
9 தொகுதிகளில் 191 வேட்பு மனுக்கள் ஏற்பு

மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது
நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


