எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்! நடிகர்கள், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு வாய்ப்பு!!

மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலுக்காக, பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

மேற்கு வங்கத்தில் பாஜக. - afp.com

Updated On :19 மார்ச் 2026, 6:22 pm IST

மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, நடிகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான பேரவைத் தேர்தல் தேதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) அறிவிக்கப்பட்டன.

புதுச்சேரி யூனியன் பிரதேசம், கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களுக்கும் ஏப். 9-ஆம் தேதி, தமிழ்நாட்டில் ஏப். 23 ஆம் தேதி ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப். 23 மற்றும் ஏப். 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பேரவைத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.

சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிகத் தொகுதிகளைக் கொண்டுள்ள தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேற்கு வங்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்வருமான மமதா பானர்ஜி, தனித்து தேர்தலை சந்திக்கத் திட்டமிட்டு, மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கான தேர்தலில் 291 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

மேற்கு வங்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், 144 வேட்பாளர்களுடன் முதல்கட்ட பட்டியலை திங்கள்கிழமை (மார்ச் 16) வெளியிட்டது பாஜக. இதில், முதல்வா் மம்தா பானர்ஜியின் பவானிபூர் தொகுதியில் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், 111 பேர் இடம்பெற்றுள்ளனர். அதில், முன்னணித் தலைவர்கள், கட்சித்தாவிய தலைவர்கள், புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க பெயர்களாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் குமார் ஜகத்டால் தொகுதியிலும், கௌஸ்தவ் பக்ச்சி பாரக்பூர் தொகுதியிலும், நடிகையான ரூபா கங்குலி சோனார்பூர் தக்‌ஷின் தொகுதியிலும், முன்னாள் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் தபாஸ் ரேய், மணிக்தலா தொகுதியிலும், நடிகை பாப்பியா அதிகாரிக்கு டோலிகஞ்ச் தொகுதியிலும், பிரியாங்கா திரெவால் எண்டல்லி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

Summary

The Bharatiya Janata Party (BJP) on Thursday released its second list of 111 candidates for the upcoming West Bengal Assembly elections, featuring a mix of prominent leaders, turncoats, and fresh faces.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.