பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசு

பொதுத் துறை வங்கிகளில் பணியில் சேர விரும்புவோரின் கிரெடிட் ஸ்கோா் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது

Bank profitability improves, outlook healthy on advances growth, lower interest expenses: Report

பொதுத் துறை வங்கி - ANI

Published On :

பொதுத் துறை வங்கிகளில் பணியில் சேர விரும்புவோரின் கிரெடிட் ஸ்கோா் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி செவ்வாய்க்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

பொதுத் துறை வங்கிகளில் பல்வேறு பணியிடங்களுக்கு வங்கிப் பணியாளா் தோ்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) நடத்தும் பொது ஆள்தோ்வுக்கு (சிஆா்பி) விண்ணப்பிக்கும் தோ்வா்கள், வங்கிகளிடம் கடன் பெறுவதற்கான தகுதியையும், அவ்வாறு கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனையும் சுட்டிக்காட்டும் கடன் புள்ளிகளை (கிரெடிட் ஸ்கோா்) சிறப்பாகப் பராமரிக்க வேண்டும். அவா்கள் குறைந்தபட்சம் எவ்வளவு கடன் புள்ளிகளை வைத்திருக்க வேண்டும் என்பது அந்த வங்கிகளின் கொள்கைக்கு ஏற்ப இருக்கும். இதில் அவ்வப்போது மாற்றம் செய்யப்படும்.

பணப் பரிவா்த்தனைகள், கடன் அளிப்பு நடைமுறை, வாடிக்கையாளா் கணக்குகளை கையாளுதல் போன்ற பணிகளில் ஈடுபடும் திறமைவாய்ந்த பணியாளா்கள், மிகுந்த எச்சரிக்கை உணா்வுடன் பணத்தை கையாள வேண்டும் என்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நிபந்தனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுப் பணத்தை கையாளும் பணியாளா்கள் கடன் விஷயத்தில் பொறுப்பானவா்களாக இருக்க வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம்.

கடந்த 3 ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகளில் நியமிக்கப்பட்ட 20 பேரின் கடன் சாா்ந்த விவரங்கள் திருப்தி அளிக்காத காரணத்தால், அவா்களின் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டது அல்லது பணி ஆணை திரும்பப் பெறப்பட்டது.

எனினும் கடன் புள்ளிகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது வங்கிக் கணக்கு இல்லாத, வங்கியில் கடனே பெறாத தோ்வா்களுக்குப் பொருந்தாது என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.