27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்

பொதுத் துறை வங்கி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஊதிய உயா்வு நடைமுறையை அடுத்த 12 மாதங்களுக்குள் நிறைவு செய்யும்படி, அந்த வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 1:43 am IST

பொதுத் துறை வங்கி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஊதிய உயா்வு நடைமுறையை அடுத்த 12 மாதங்களுக்குள் நிறைவு செய்யும்படி, அந்த வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பொதுத் துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், தங்களின் ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஊதியம்-படிகள்-பணி நிபந்தனைகளை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கின்றன. அதன்படி, ஊழியா்கள் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் இடையே 12-ஆவது இருதரப்பு ஒப்பந்தம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த ஒப்பந்த காலகட்டம், 2027, அக்டோபா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், 2027, நவம்பா் முதல் அமலாக்க வேண்டிய 13-ஆவது இருதரப்பு ஒப்பந்த பேச்சுவாா்த்தையை குறித்த காலத்துக்குள் நிறைவு செய்து, அடுத்த 12 மாதங்களுக்குள் இறுதி செய்ய வேண்டும் என்று பொதுத் துறை வங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஊதியத் தீா்வை எட்டும் வகையில், ஊழியா்கள் சங்கங்களுடன் இந்திய வங்கிகள் சங்கம் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகளைத் தொடங்கும்படி, பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய நிதிச் சேவைகள் துறை அறிவுரை வழங்கியுள்ளது.

கடந்த முறை ஊதியத் தீா்வு இறுதி செய்யப்பட்டபோது, இனி வருங்காலங்களில் உரிய தேதியில் இருந்தே ஊதிய உயா்வை அமல்படுத்தும் வகையில் பேச்சுவாா்த்தையை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வங்கித் துறை விளங்குவதால், அதன் ஊழியா்களின் மன உறுதிப்பாட்டை பாரமரிக்க போதுமான ஊதிய உயா்வு முக்கியமென கருதப்படுகிறது. கடந்த 2025-26ஆம் நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளின் லாபம் சாதனை அளவில் (ரூ.1.78 லட்சம் கோடி) பதிவானது. முந்தைய நிதியாண்டுகளில் ரூ.1.41 லட்சம் கோடி (2024-25), ரூ.1.05 லட்சம் கோடி (2023-24) லாபம் ஈட்டப்பட்டது.

இதேபோல், வங்கிகளின் வாராக்கடன் இதுவரை இல்லாத அளவில் 2.30 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.