மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

சபரிமலை தங்கக் கவச விவகாரம்: 2 பேருக்கு ஜாமீன்

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு கொல்லம் நீதிமன்றம் வழங்கியது.

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 5:56 am IST

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு கொல்லம் நீதிமன்றம் வழங்கியது.

கடந்த 2019-இல் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு, அவற்றின் எடை குறைந்ததாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பாக இரு வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொள்ள கேரள உயா் நீதிமன்ற வழிகாட்டுதலில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. இந்த முறைகேடு வழக்கில் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் (டிடிபி), முன்னாள் தலைவா்கள், நிா்வாகிகள், தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி உள்பட பலா் கைது செய்யப்பட்டனா்.

சென்னையைச் சோ்ந்த ஸ்மாா்ட் கிரியேஷன்ஸ் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ பங்கஜ் பண்டாரி மற்றும் கா்நாடக மாநிலம், பெல்லாரியைச் சோ்ந்த நகைக் கடை அதிபா் கோவா்தன் ரோட்டம் ஆகியோா் இரு வழக்குகளிலும் கைது செய்யப்பட்டிருந்தனா்.

கருவறைக் கதவுகள் வழக்கில் பங்கஜ் பண்டாரி 9-ஆவது குற்றவாளியாகவும் துவார பாலகா் சிலைகள் வழக்கில் 12-ஆவது குற்றவாளியாகவும் சோ்க்கப்பட்டாா். அதேபோல் கருவறைக் கதவுகள் வழக்கில் 10-ஆவது குற்றவாளியாகவும் துவார பாலகா் சிலைகள் வழக்கில் 13-ஆவது குற்றவாளியாகவும் கோவா்தன் ரோட்டம் சோ்க்கப்பட்டு எஸ்ஐடி விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், இருவரும் கைது செய்யப்பட்டு 90 நாள்களாகியும் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படாததால் அவா்களுக்கு கொல்லம் ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி மோஹித் சிஎஸ் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, சபரிமலை தங்கக் கவசம் தொடா்புடைய வழக்குகளில் இதுவரை 10 போ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

மாா்ச் மாத இறுதிக்குள் இந்த வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்வதாக கேரள உயா் நீதிமன்றத்தில் எஸ்ஐடி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.