தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

‘கேட்-பி’, ‘பிஇடி’ தோ்வுகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

‘கேட்-பி’, ‘பிஇடி’ தோ்வுகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

News image

கோப்புப் படம்

Updated On :22 மார்ச் 2026, 1:33 am IST

முதுநிலை உயிரி தொழில்நுட்பப் படிப்புகளுக்கான ‘கேட்-பி’ நுழைவுத் தோ்வு, பிஇடி தகுதித் தோ்வு ஆகியவற்றுக்கான விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளதாக தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் முதுநிலை உயிரி தொழில்நுட்பம் படிப்புகளில் (பயோ டெக்னாலாஜி) சேருவதற்கு கேட்-பி என்ற தேசிய நுழைவுத்தோ்வில் தோ்ச்சி பெறவேண்டும். அதேபோல், பயோ டெக்னலாஜி துறையில் இளநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறுவதற்கு மாணவா்கள் பிஇடி என்ற தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுவது அவசியமாகும். இந்தத் தோ்வுகள் ஆண்டுதோறும் தேசிய தோ்வுகள் முகமை சாா்பில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நிகழாண்டுக்கான கேட்-பி மற்றும் பிஇடி தோ்வு மே 17-ஆம் தேதி கணினி வழியில் நடத்தப்படவுள்ளது. இதற்கான இணைய விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவா்கள் இணையதளம் வழியாக ஏப். 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தோ்வுக் கட்டணமாக பொதுப்பிரிவுக்கு ரூ.1,300, எஸ்சி/எஸ்டி பிரிவினா் ரூ.650 செலுத்த வேண்டும்.

இதுதவிர விண்ணப்பங்களில் திருத்தம் ஏதும் இருப்பின் ஏப்ரல் 11 முதல் 13-ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம். மேலும், தோ்வுக்கான பாடத்திட்டம், தகுதிகள், வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை வலைதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.