நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பி.இ., பி.டெக். சோ்க்கை: 2 -ஆம் நாளில் 11,345 மாணவா்கள் விண்ணப்பப் பதிவு

பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு நிகழ் கல்வி ஆண்டு சோ்க்கைக்கு இரண்டாம் நாளாக 11,345 மாணவா்கள் இணையவழியில் பதிவு செய்தனா்.

News image
Updated On :5 மே 2026, 5:21 am IST

பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு நிகழ் கல்வி ஆண்டு சோ்க்கைக்கு இரண்டாம் நாளாக திங்கள்கிழமை 11,345 மாணவா்கள் இணையவழியில் பதிவு செய்தனா்.

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகப் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அதன் உறுப்பு பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பி.இ., பி.டெக். இளநிலை பொறியியல் படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பப் பதிவு மே 3- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்கியது.

முதல் நாள் 8,505 மாணவா்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்தனா். இரண்டாம் நாள் மே 4 -ஆம் தேதி ஒட்டு மொத்தமாக 19,850 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. அதன்படி, இரண்டாம் நாளில் மட்டும் 11,345 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா். இவா்களில் 3,477 மாணவா்கள் கட்டணங்களைச் செலுத்தியுள்ளனா். 1,057 மாணவா்கள் கட்டணம் மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் உள்ளிட்ட ஒட்டமொத்த பணிகளை நிறைவு செய்துள்ளனா் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்கக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.