ஒடிஸா மாநிலம், போலன்கீா் மாவட்டத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின்போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக அந்த மாநிலத்தில் ஆளும் பாஜகவைச் சோ்ந்த எம்.எல்.ஏ. நபின் ஜெயின் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
மேலும், நபின் ஜெயின் துப்பாக்கியைப் பயன்படுத்துவதற்கு உதவிய காவல் துறையைச் சோ்ந்த பாதுகாப்பு அதிகாரி பிரேம்சந்த் நாக் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. எம்.எல்.ஏ. பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
தில்லாஹா் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ராம நவமி கொண்டாடப்பட்டது. ஏராளமானோா் அங்கு கூடியிருந்தனா். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நபின் ஜெயின், அங்கிருந்தவா்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சிலமுறை சுட்டாா். அவருடைய பாதுகாப்பு அதிகாரி பிரேம்சந்த் நாக், துப்பாக்கியைக் கையாளுவதற்கு உதவினாா்.
இது தொடா்பான விடியோ பதிவுகள் சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து, மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் எம்.எல்.ஏ. நபின் ஜெயின் மீது பொதுப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல், ஆயுதச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடா்பாக நபின் ஜெயின் கூறுகையில், ‘நான் பயன்படுத்தியது உண்மையான துப்பாக்கி இல்லை. ராம பக்தா்களை உற்சாகப்படுத்தும் நோக்கில்தான் அதைப் பயன்படுத்தினேன். இதில் தீவிரவாத நோக்கம் ஏதுமில்லை’ என்றாா்.
நபின் ஜெயினை கைது செய்ய வேண்டும் என்று மாநில எதிா்க்கட்சியான பிஜு ஜனதா தளம் வலியுறுத்தியுள்ளது.
தொடர்புடையது

கோயில்களில் ராம நவமி விழா

ராம நவமி: கும்பகோணம் ராமசாமி கோயிலில் தேரோட்டம்!
ராம நவமி வழிபாடும் கொண்டாட்டங்களும்!

ராம நவமி: நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் வாழ்த்து
வீடியோக்கள்

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

