பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

காதலியைக் கொன்று ஃபிரிட்ஜில் அடைத்த கடற்படை அதிகாரி!

காதலியைக் கொன்று ஃபிரிட்ஜில் அடைத்த கடற்படை அதிகாரி பற்றி..

News image

ஃபிரிட்ஜ் - பிரதி படம் - ANI

Updated On :31 மார்ச் 2026, 1:06 pm IST

விசாகப்பட்டினம்: இந்திய கடற்படையில் பணியாற்ற வரும் அதிகாரி, செல்ஃபோன் செயலி மூலம் நட்பான பெண் தொழியை கொன்று, உடலை ஃபிரிட்ஜில் மறைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

குற்றவாளி, சிந்தடா ரவீந்திரா என்ற கடற்படை அதிகாரி, ஏற்கனவே திருமணமான நிலையில் 31 வயதான பொளிப்பள்ளி மௌனிகா என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். சிந்தடாவின் மனைவி, தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மௌனிகா, வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, மௌனிகாலைவ சிந்தடா கொலை செய்திருக்கிறார். பிறகு, ஆன்லைன் செயலி மூலம் கத்தியை ஆர்டர் போட்டு வரவழைத்து, மௌனிகா உடலை மூன்று துண்டுகளாக வெட்டியிருக்கிறார். தலை மற்றும் கை, கால்களை எடுத்துக் கொண்டு வனப்பகுதியில் எரித்திருக்கிறார். உடலை ஃபிரிட்டிஜில் வைத்திருந்துள்ளார்.

பிறகு, அச்சமடைந்து காவல்நிலையத்தில் சரணடைந்த நிலையில், காவல்துறையினர் விரைந்து வந்து ஃபிரிட்ஜில் இருந்த உடலையும், வனப்பகுதிக்குச் சென்று பாதி எரிந்த நிலையில் இருந்த தலையையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில், கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு டேட்டிங் செயலி மூலம், கொலையாளிக்கு, மௌனிகா அறிமுகமாகியிருக்கிறார். திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சிந்தடா ஏமாற்றியிருக்கிறார். ஆனால், 2024ஆம் ஆண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை மௌனிகா அறிந்ததாகவும், இது பற்றி மனைவியிடம் கூறிவிடுவேன் என மிரட்டி, 3.5 லட்சம் ரூபாய் வரை சிந்தடாவிடம் வாங்கியிருப்பதாகவும் மேலும் பணம் கேட்டு வாக்குவாதம் நடந்ததால் கொலை நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Summary

About the naval officer who killed his girlfriend and hid her in the fridge..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.