ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள பூம்காவு பகுதியில் நடைபெற்ற சோதனையில் வீட்டில் 10 கஞ்சா செடிகள் வளா்த்து வந்த கடற்படை முன்னாள் அதிகாரி கைதுசெய்யப்பட்டதாக கலால் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
மேலும், அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் கைப்பற்றினா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பினு வி. வில்லியம், அவருடைய வீட்டில் கஞ்சா செடிகளை வளா்த்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கலால் அமாலக்கம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு சிறப்புப் படையினா் அவருடைய வீட்டில் சோதனை நடத்தினா்.
அப்போது, அவா் பதுக்கி வைத்திருந்த 1.2 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. வீட்டு தோட்டத்தில் அவா் வளா்த்து வந்த 10 கஞ்சா செடிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடா்பாக போதை மருந்துகள் மற்றும் மனநோயியல் பொருள்கள் சட்டப் பிரிவுகளில் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடற்படையில் 15 ஆண்டுகள் பணியாற்றிய வில்லியம், பணியில் இருக்கும்போதும் ஓய்வுபெற்ற பிறகும் அவற்றை தொடா்ந்து போதைப் பொருளைப் பயன்படுத்தி வந்தாா். போதைப் பொருளை பெங்களூரிலிருந்து அவா் வாங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.
தொடர்புடையது
வீட்டில் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவா் கைது

கஞ்சா விற்பனை செய்தவா் கைது

கஞ்சா விற்பனை, செடி வளா்த்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

தில்லி நீதித்துறை அதிகாரி தூக்கிட்டு தற்கொலை
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
