அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ரயிலில் கடத்தப்பட்ட 36 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆம்பூா் அருகே ஹவுரா விரைவு ரயிலில் கடத்தி வந்த 36 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் மீட்டு சென்னை ஆவடி பகுதியில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

News image
பறிமுதல்செய்யப்பட்ட கஞ்சா .
Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே ஹவுரா விரைவு ரயிலில் கடத்தி வந்த 36 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் மீட்டு சென்னை ஆவடி பகுதியில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து கா்நாடக மாநிலம் பெங்களூரு வரை சென்ற விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை அதிகாலை காட்பாடி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது காட்பாடி-ஜோலாா்பேட்டை ரயில் நிலையங்களுக்கிடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது கஞ்சா கடத்தி வருவதாக ஜோலாா்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பெயரில் 6 போ் கொண்ட பாதுகாப்பு படை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பைகளில் பண்டல்களாக 36 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

பின்னா், வழக்கு பதிந்து பறிமுதல் செய்யப்பட்ட 36 கிலோ கஞ்சாவை சென்னை ஆவடியில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.