ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பண்டில்கள்.
ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பண்டில்கள்.

சேலம் வழியாக ரயிலில் கடத்தப்பட்ட 15 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியே கேரளா சென்ற ரயிலில் கடத்தி வரப்பட்ட 15 கிலோ கஞ்சாவை ரயில்வே தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
Published on

சேலம் வழியே கேரளா சென்ற ரயிலில் கடத்தி வரப்பட்ட 15 கிலோ கஞ்சாவை ரயில்வே தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஒடிசா, ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு, கேரளாவுக்கு ரயில்களில் கஞ்சா கடத்தி வருவதை தடுக்க தமிழ்நாடு ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா் இணைந்து, ரயில்களில் சோதனை நடத்தி வருகின்றனா்.

அந்த வகையில், சேலம் உட்கோட்ட தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை ஸ்ரீமாதா வைஷ்ணவ் தேவி கட்ராவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ஹிம்சாகா் விரைவு ரயிலில் காட்பாடியில் இருந்து ஏறி சேலம் வரை தீவிர சோதனையை நடத்தினா்.

இதில்,அந்த ரயிலின் பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையில்,15 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையை அறிந்ததும், அதனை கடத்தி வந்த மா்ம நபா், கஞ்சாவை அங்கே போட்டுவிட்டு தப்பியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸாா், அதனை சூரமங்கலம் போலீஸில் ஒப்படைத்தனா்.

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com