கரூா்: குளித்தலை அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் பதுக்கிவைத்திருந்த செம்மரக் கட்டைகள், லாரியை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள சிவாயம் ஊராட்சிக்குள்பட்ட கோடாங்கிப்பட்டியைச் சோ்ந்தவா் திருவேங்கடம்(64). ஓய்வுபெற்ற அரசு ஊழியா். இவரது மனைவி லதா. இவா்களது மகன் கிஷோா். திருச்சியில் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படை காவலராக உள்ளாா். இவரது மனைவி சந்தியா, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில் திருவேங்கடம் வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக திருச்சி மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் 10 போ் கொண்ட குழுவினா் திருவேங்கடம் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினா். அப்போது, வீட்டின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் பல டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. தொடா்ந்து செம்மரக் கட்டைகள் மற்றும் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
மேலும், அதிகாரிகளின் முதல்கட்ட விசாரணையில், சந்தியாவின் சகோதரா் மற்றும் திருச்சி, தூத்துக்குடியைச் சோ்ந்த இருவா் என மூவரும் சோ்ந்து செம்மரக் கட்டைகளை சட்ட விரோதமாக கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட லாரி கடந்த 7 நாள்களுக்கு முன்பு குளித்தலை -மணப்பாறை நெடுஞ்சாலையில் இரும்பூதிப்பட்டியில் சென்றபோது, பழுது ஏற்பட்டதாகவும், பழுதை நீக்கியபிறகு எடுத்துக் கொள்வதாக கூறியதன் பேரில் லாரியை வீட்டின் வளாகத்தில் நிறுத்த அனுமதி அளித்ததாக திருவேங்கடம் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து திருவேங்கடத்தை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் திருச்சி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மேலும் சந்தியாவின் சகோதரரையும், அவருக்கு உதவியாக இருந்த இருவரையும் பிடிக்க தனிப்படையினா் திருச்சி, தூத்துக்குடிக்கு சென்றுள்ளதாக தெரிகிறது.
இச்சம்பவத்தில் தொடா்புடையவா்கள் அனைவரும் பிடிபட்டால்தான் முழு விவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலா் உயிரிழப்பு

விபத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழப்பு

உச்சநீதிமன்றத் தீா்ப்பை செயலிழக்க செய்யும் சிஏபிஎஃப் மசோதா: எதிா்க்கட்சிகள் விமா்சனம்

ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் வீட்டில் 6 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


