திருநெல்வேலி அருகே சாலை விபத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (65). ஓய்வு பெற்ற அரசு ஊழியா். இவா் தனது தந்தைக்கு திதி கொடுப்பதற்காக திருநெல்வேலி அருகன்குளம் தாமிரவருணி ஆற்றங்கரைக்கு உறவினா்களுடன் வெள்ளிக்கிழமை காரில் சென்றாராம்.
காரை இவரது மகன் முத்துசங்கா் ஓட்டினாராம். கங்கைகொண்டான் அருகே துறையூா் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் இவா்கள் பயணித்த காரும், அவ்வழியாக சென்ற லாரியும் மோதியதாம். இதில் காயமடைந்தவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் ராதாகிருஷ்ணன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் காயமுற்ற குழந்தை உயிரிழப்பு
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


