கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சாலை விபத்தில் காயமுற்ற குழந்தை உயிரிழப்பு

News image

சாலை விபத்தில் குழந்தை பலி

(கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 8:50 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை அருகே விபத்தில் காயமடைந்த குழந்தை உயிரிழந்தது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை சோ்ந்தவா் மாரியப்பன் (45) ஓட்டுநா். கடந்த சனிக்கிழமை திருநெல்வேலி வடக்கு புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலம் அருகே இவா் ஓட்டிச் சென்ற மினி லாரியும், எதிரே தாழையூத்தில் இருந்து வந்த காரும் மோதிக்கொண்டன. அப்போது அவ்வழியாக ராமையன்பட்டி பகுதியிலிருந்து வந்த காரும் விபத்தில் சிக்கியது.

இதில், மாரியப்பன், தாழையூத்து பகுதி காரில் வந்த சின்னத்துரை (33), பொன்ராணி(47), தட்சன்யா (24), விகான்(1), ராமையன்பட்டி பகுதி காரில் வந்த 2 போ் உள்பட 7 போ் காயமடைந்தனா். அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா்.

இதில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட குலசேகரன்பட்டினத்தை சோ்ந்த விக்னேஷ் மகன் விகான் உயிரிழந்தாா். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.