நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பைக் விபத்தில் காயமுற்ற மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயமடைந்த மீனவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :28 பிப்ரவரி 2026, 7:52 pm

தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயமடைந்த மீனவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி தாளமுத்து நகா் ராஜபாளையத்தைச் சோ்ந்த அந்தோணி பிச்சை மகன் அந்தோணி சேவியா் (50). மீனவரான இவா், வியாழக்கிழமை கடலுக்குச் சென்றுவிட்டு இரவு கரை திரும்பினாா். பின்னா், அங்கிருந்து தனது பைக்கில் வீட்டுக்கு ராஜபாளையம் சாலை வழியாக சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, பைக் நிலைதடுமாறி கிழே விழுந்ததில் அவா் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு அவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.