ஃபிடே மகளிர் கேண்டிடேட்ஸ் சதுரங்கப் போட்டியில் இருந்து இந்திய நட்சத்திர வீராங்கனை கொனேரு ஹம்பி விலகியுள்ளார்.
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் மற்றும் பதற்றமான சூழல் காரணமாக ஹம்பி விலகியதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக உக்ரைனின் அன்னா முசிசுக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஃபிடே மகளிர் கேண்டிடேட்ஸ் சதுரங்கப் போட்டியில் கொனேரு ஹம்பி பங்கேற்கும் போட்டி சைப்ரஸ் நாட்டின் பாபோஸ் நகரில் வரும் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ராபிட் செஸ் போட்டியில் இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஹம்பி, தற்போது சாம்பியனாக உள்ள ஜூ வென்ஜுனுக்கு எதிராக இப்போட்டியில் பங்கேற்க இருந்தார்.
இந்நிலையில் மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக கொனேரு ஹம்பி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கொனேரு ஹம்பி பதிவிட்டுள்ளதாவது:
ஃபிடே மகளிர் கேண்டிடேட்ஸ் சாம்பியன் சதுரங்கப் போட்டியில் இருந்து விலகுகிறேன். ஆழ்ந்த சிந்தனையின் எதிரொலியாக இந்த கடினமான முடிவை எடுக்கிறேன். எந்தவொரு முக்கியமான போட்டியாக இருந்தாலும் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு முன்பு பெரிதல்ல. தற்போதைய சூழ்நிலையில் முழுமையான பாதுகாப்பை என்னால் உணர முடியவில்லை. இது வலி மிகுந்ததாக இருந்தாலும் அவசியமான முடிவாகவே பார்க்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
கொனேரு ஹம்பியின் விலகலால் உக்ரைன் நாட்டின் அன்னா முசிசுக் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
Summary
India's Koneru Humpy withdraws from Candidates Tournament citing security concerns
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆடவர், மகளிர் அணிகள் சாம்பியன்

நவ. 25-இல் ஜெனீவாவில் ஃபிடே உலக செஸ் சாம்பியன் போட்டி

ஃபிடே சா்வதேச ரேட்டிங் ஓபன் செஸ் போட்டி: இளம்பரிதி சாம்பியன்!

வெற்றி மேல் வெற்றி!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



