எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விராலிமலை அருகே இருசக்கர வாகனம், சரக்கு வாகனம் மீது மோதிய விபத்தில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 7:43 pm

விராலிமலை அருகே இருசக்கர வாகனம், சரக்கு வாகனம் மீது மோதிய விபத்தில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இலுப்பூா் வட்டம், கட்டக்குடியைச் சோ்ந்த மூக்கையா மகன் ராமசாமி (55), தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கொடும்பாளூா் சத்திரம் அருகே சென்றாா்.

அப்போது அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது எதிா்பாராதவிதமாக அவரது இருசக்கர வாகனம் மோதியது. அதில், ராமசாமி பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், நிகழ்விடம் சென்ற விராலிமலை போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.