நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

இந்தியாவின் முதல் தடையற்ற சுங்கச்சாவடி: குஜராத்தில் தொடக்கம்!

இந்தியாவின் முதல் பல வழிச்சாலை தங்கு தடையற்ற சுங்கச்சாவடி அமைப்பு குஜராத் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :2 மே 2026, 2:46 am IST

இந்தியாவின் முதல் பல வழிச்சாலை தங்கு தடையற்ற சுங்கச்சாவடி அமைப்பு குஜராத் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

சூரத்-பரூச் தேசிய நெடுஞ்சாலை-48 வழித்தடத்தில் அமைந்துள்ள சோா்யாசி சுங்கச்சாவடியில் இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் நிற்கத் தேவையில்லை.

தானியங்கி வாகனப் பலகை அங்கீகாரம் (ஏஎன்பிஆா்), செயற்கை நுண்ணறிவு பகுப்பாய்வு மற்றும் ஃபாஸ்டேக் ஆகிய நவீன தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு கேமராக்கள் மற்றும் க்யூஆா் குறியீடுகள் மூலம் வாகனம் சென்றுகொண்டிருக்கும்போதே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளன.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி எக்ஸ் வலைதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘குஜராத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ள நாட்டின் முதல் பல வழிச்சாலை தங்கு தடையற்ற சுங்கச்சாவடி அமைப்பு சுங்கச்சாவடிகளை எண்மமயமாக்கல், நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பை நவீனமயமாக்கல் ஆகிய முன்னெடுப்புகளின் மைல்கல்.

இந்த புதிய சுங்கச்சாவடி கட்டண வசூலிப்பு முறையின்கீழ் வாகன போக்குவரத்து நெரிசல், வாகன உமிழ்வு மற்றும் சுங்கச்சாவடிகளில் மனிதா்களின் தலையீடு குறைக்கப்படவுள்ளது. வாகனங்களின் எரிசக்தி திறன் மேம்படவுள்ளது.

மேலும் வணிக எளியமயமாக்கல் ஊக்குவிக்குப்பட்டு நாடு முழுவதும் சரக்கு மற்றும் தளவாடங்கள் விரைவாக கொண்டு செல்வது உறுதிப்படுத்தப்படுகிறது’ என குறிப்பிட்டாா்.

முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற இரண்டாவது தளவாடங்கள் ஆற்றல் மாநாடு மற்றும் விருதுகள் 2026 நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதின் கட்கரி, நாட்டில் உள்ள குறிப்பிட்ட சில சுங்கச்சாவடிகளில் டிசம்பா் மாதத்தில் இருந்து தடையற்ற சேவைகள் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தாா்.