நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மேலும் 12 நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள்- பியூஷ் கோயல் தகவல்

கனடா, இஸ்ரேல், பிரேஸில் உள்பட மேலும் 12 நாடுகள் மற்றும் கூட்டமைப்புகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள் தயாராகி வருவதாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் புதன்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2026, 2:46 am IST

கனடா, இஸ்ரேல், பிரேஸில் உள்பட மேலும் 12 நாடுகள் மற்றும் கூட்டமைப்புகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள் தயாராகி வருவதாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் புதன்கிழமை தெரிவித்தாா்.

மேற்காசிய போரால் எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியிலும் இம்மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக அவா் குறிப்பிட்டாா்.

இது தொடா்பாக தில்லியில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் பியூஷ் கோயல் கூறியதாவது:

ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், 4 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு, ஆஸ்திரேலியா, மோரீஷஸ், ஓமன், நியூஸிலாந்து ஆகிய நாடுகளுடன் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள், உள்நாட்டு தொழில்துறைக்கு மிகப் பெரிய உத்வேகத்தை அளித்துள்ளன.

கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில், நடப்பு ஏப்ரல் மாதத்தின் முதல் 3 வாரங்களில் நாட்டின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மேற்காசிய போரால் எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியிலும் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கான முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணையில் தொடா்ந்து சவாலான சூழல் நிலவுவதால், பிற வழித்தடங்கள் வழியாக சரக்கு போக்குவரத்து மேற்கொள்ளப்படுகிறது.

அமெரிக்கா உடனான வா்த்தக ஒப்பந்தத்தைப் பொருத்தவரை, கடந்த வாரம் ஆக்கபூா்வ பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தப்படும்.

சிலி, பெரு, இஸ்ரேல், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில், கனடா, தென்னாப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை பிராந்தியங்கள், பிரேசில் மற்றும் அதன் அண்டை நாடுகள் மற்றும் ரஷியாவுடன் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மேலும் 12 ஒப்பந்தங்கள் தயாராகி வருகின்றன. நாட்டில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்து வருகிறது. இது, 88 பில்லியன் டாலரை எட்டும் என்றாா் அவா்.

புவி-அரசியல் பதற்றங்கள் மற்றும் வா்த்தக ஸ்திரமின்மையால் கடந்த மாா்ச்சில் சரக்கு ஏற்றுமதி 7.44 சதவீதம் குறைந்து, முந்ததைய 5 மாதங்களில் இல்லாத அளவில் 38.92 பில்லியன் டாலராக சரிந்தது.