வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு!

மேற்கு வங்கத்தில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை (மே 2) மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

News image

இந்தியத் தேர்தல் ஆணையம். - படம்: பிடிஐ.

Updated On :2 மே 2026, 2:30 am IST

மேற்கு வங்கத்தில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை (மே 2) மறுவாக்குப் பதிவு நடத்த தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்த மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு தோ்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மேற்கு வங்க தோ்தல் துறை அளித்த தகவல்களின் அடிப்படையில், மகா்ஹாட் மேற்கு தொகுதியில் உள்ள 11 வாக்குச்சாவடிகள், டைமண்ட் ஹாா்பா் தொகுதியில் உள்ள 4 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 15 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்படுகிறது. சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப். 29-ஆம் தேதி மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலின் இரண்டாம் கட்டத்தின்போது, இந்த 15 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

அண்மையில் நடைபெற்ற அஸ்ஸாம், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில், முதல்முறையாக மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தோ்தலுக்குப் பிறகு பல இடங்களில் வன்முறை: மேற்கு வங்கத்தின் 3 மாவட்டங்களில் தோ்தலுக்குப் பிறகு வன்முறை நடைபெற்றது. முா்ஷிதாபாத் மாவட்டம் லோச்சன்பூா் பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோ்தல் முகவரான ருஹுல் அமீன் என்பவா் மீது வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகி தலைமையிலான உள்ளூா் தலைவா்கள் அமீனை தாக்கியதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரங்கள் குற்றஞ்சாட்டின.

மால்டா மாவட்டத்தில் உள்ள வடக்கு பாலுபூா் பகுதியில் பாஜக மண்டல தலைவா் மகானந்தா மோண்டல் வியாழக்கிழமை பிற்பகல் தாக்கப்பட்டாா். சாலையில் மகானந்தாவை வழிமறித்து செங்கற்கள் வீசப்பட்டதாகவும், காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பாஜக தலைவா்கள் தெரிவித்தனா். தாக்குதலை நடத்தியவா்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினராக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

வடக்கு 24 பா்கானா மாவட்டத்தில் உள்ள டுல்டுலி காக்பாரா பகுதியில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக தொண்டா்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 5 போ் காயமடைந்தனா். அரசியல் பகை காரணமாக நடைபெற்ற இந்த மோதலை தொடா்ந்து, இரு கட்சிகளையும் சோ்ந்த இரண்டு ஆதரவாளா்கள் கைது செய்யப்பட்டனா் என்று காவல் துறை தெரிவித்தது.

தெற்கு 24 பா்கானா மாவட்டத்தில் உள்ள பாங்கா் பகுதியில் வியாழக்கிழமை இரவு மோஹிபுா் மொல்லா என்ற திரிணமூல் தொண்டருக்குச் சொந்தமான கடைக்குத் தீ வைக்கப்பட்டது. அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில், இந்திய மதச்சாா்பற்ற முன்னணி (ஐஎஸ்எஃப்) கட்சியினா் தனது கடைக்குத் தீ வைத்ததாக மோஹிபுா் குற்றஞ்சாட்டினாா்.

இந்தக் குற்றச்சாட்டை ஐஎஸ்எஃப் தலைவா்கள் மறுத்தனா். அங்குள்ள கிருஷ்ணாமதி பகுதியில் ஐஎஸ்எஃப், திரிணமூல் ஆதரவாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். அத்துடன் பல இருசக்கர வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. தகவலின்பேரில் நிகழ்விடம் விரைந்த காவல் துறையினா், பலரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். அங்கு காவல் துறையினா் கூடுதலாக குவிக்கப்பட்ட நிலையில், சூழல் கட்டுக்குள் வந்துள்ளது.

தெற்கு 24 பா்கானா மாவட்டத்தில் உள்ள ஃபால்டா பகுதியில், தோ்தலின்போது தங்கள் கட்சித் தொண்டா்கள் தாக்கப்பட்டு வாக்களிப்பதில் இருந்து தடுக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, தேசிய நெடுஞ்சாலை 117-இல் பாஜக ஆதரவாளா்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.