திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்கத்தில், 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதியும் 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப். 29 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் போதே தேர்தல் ஆணையத்தை திரிணமூல் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்திருந்தது. வாக்காளர்களின் உரிமையைப் பறிக்கும் நோக்கில் பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றம்சாட்டியிருந்தது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மேற்கு வங்க காவல்துறை உயர் அதிகாரிகள் அனைவரையும் கூண்டோடு மாற்றி உத்தரவிட்டிருந்தது.
தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
அதிகாரிகள் மாற்றத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையரை டெரெக் ஓ பிரையன் தலைமையில் திரிணமூல் எம்பிக்கள் இன்று சந்தித்தனர்.
இந்த சந்திப்பு முடிந்தவுடன், திரிணமூல் காங்கிரஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அதில் தெரிவித்திருப்பதாவது:
“மேற்கு வங்கத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல் அச்சமற்ற, வன்முறையற்ற, மிரட்டலற்ற மற்றும் தூண்டுதலற்ற தேர்தலாக இருக்கும்.
வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல், வாக்குச்சாவடிக்குள் மக்களை விடாமல் தடுத்தல், வாக்காளர்களை தூண்டுதல், தேர்தலை சீர்குலைத்தல் போன்றவை இல்லாத தேர்தலாக இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
à¤à¥à¤¨à¤¾à¤µ à¤à¤¯à¥à¤ à¤à¥ तà¥à¤£à¤®à¥à¤² à¤à¤¾à¤à¤à¥à¤°à¥à¤¸ à¤à¥ दॠà¤à¥à¤
— Election Commission of India (@ECISVEEP) April 8, 2026
पशà¥à¤à¤¿à¤® बà¤à¤à¤¾à¤² मà¥à¤ à¤à¤¸ बार à¤à¥à¤¨à¤¾à¤µ:
à¤à¤¯ रहित,
हिà¤à¤¸à¤¾ रहित,
धमà¤à¥ रहित,
पà¥à¤°à¤²à¥à¤à¤¨ रहित,
à¤à¤¾à¤ªà¤¾ रहित,
बà¥à¤¥ à¤à¤µà¤ सà¥à¤°à¥à¤¸ à¤à¤¾à¤®à¤¿à¤à¤ रहित हà¥à¤à¤° हॠरहà¥à¤à¤à¥
ECI's Straight-talk to Trinamool Congress
This time, the Elections in West Bengal would surely be :⦠pic.twitter.com/p5fM8Uu337
திரிணமூல் விளக்கம்
இதனிடையே, தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த டெரெக் ஓ பிரையன் கூறியதாவது:
”தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்திக்கச் சென்றோம். சந்திப்பு தொடங்கிய 7 நிமிடங்களுக்குள்ளாகவே, அவர் எங்களைப் பார்த்து 'இங்கிருந்து வெளியேறுங்கள்' என்று கூறினார். சந்திப்பு காலை 10:02 மணிக்குத் தொடங்கி, 10:07 மணிக்கே முடிவடைந்தது.
நீங்கள் அதிகாரிகளை இடமாற்றம் செய்துகொண்டிருக்கும்போது, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உங்களால் எப்படி நடத்த முடியும்? என்று கேள்வி எழுப்பினோம். அப்போது, "இங்கிருந்து வெளியேறுங்கள்" என்று கூறினார். நாங்கள் நேரில் கண்ட காட்சி மிகவும் அவமானகரமானது.
இன்றைய சந்திப்பின் சிசிடிவி காட்சிகளை ஒலிப்பதிவுடன் தேர்தல் ஆணையர் வெளியிட வேண்டும். மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும், பதவி நீக்க நோட்டீஸ் பெற்ற ஒரே தலைமைத் தேர்தல் ஆணையர் என்ற பெருமை அவரையே சாரும் என்று ஒருவர் பாராட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவுக்கு எதிராகவுள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்து இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
அரசியல் கட்சியின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டு, தேர்தல் ஆணையம் இறுதி எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Election Commission's Ultimatum to Trinamool Congress! What Happened?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











