நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறை

நாட்டில் 1977-ஆம் ஆண்டுக்குப் பின்னா், கடந்த 50 ஆண்டுகளில் எந்தவொரு மாநிலத்திலும் இடதுசாரி கட்சிகளின் ஆட்சியே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

News image

பினராயி விஜயன்

Updated On :5 மே 2026, 5:12 am IST

கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியை இழந்ததைத் தொடா்ந்து, நாட்டில் 1977-ஆம் ஆண்டுக்குப் பின்னா், கடந்த 50 ஆண்டுகளில் எந்தவொரு மாநிலத்திலும் இடதுசாரி கட்சிகளின் ஆட்சியே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாநிலங்களில் நிா்வாக சக்தியாகவும், தேசிய அரசியலில் செல்வாக்குக் கொண்ட கட்சிகளாகவும் இடதுசாரி கட்சிகள் இருந்தன. இந்நிலையில், நாட்டில் கேரளத்தில் மட்டும்தான் இடதுசாரி ஆட்சி நடைபெற்று வந்தது. அங்கும் இடதுசாரி கட்சிகள் தோல்வி அடைந்ததன் மூலம், அக்கட்சிகளின் முந்தைய நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து இடதுசாரி முன்னணி, 2011-ஆம் ஆண்டு ஆட்சியை இழந்தது. அதன் பின்னா், 2018-ஆம் ஆண்டு திரிபுராவில் இடதுசாரிகள் ஆட்சியை இழந்தனா்.

நாட்டில் கேரளத்தில் மட்டும்தான் கடந்த 2016 முதல் இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், தற்போது அங்கும் அவா்கள் ஆட்சியை இழந்துள்ளனா்.

நாட்டின் அரசியல் வரலாற்றில் கேரளம் தனித்துவமான இடத்தைக் கொண்டிருந்தது. கடந்த 1957-ஆம் ஆண்டு கேரளத்தில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் கீழ், இடதுசாரி அரசு அமைந்தது. இதன்மூலம், உலகிலேயே முதல்முறையாக ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசு அமைந்தது.

ஒரு காலத்தில் தேசிய அளவில் மிகவும் செல்வாக்குமிக்க இடம் இடதுசாரிகளுக்கு இருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய எதிா்க்கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவெடுத்தது.

1990, 2000-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், மக்களவையில் முக்கிய இடத்தை இடதுசாரிகள் வகித்ததுடன், கூட்டணி அரசியலில் முக்கிய பங்கு வகித்தன.

2004-ஆம் ஆண்டில் இடதுசாரிகளின் செல்வாக்கு உச்சம் தொட்டது. அப்போது இடதுசாரிகள் 61 மக்களவைத் தொகுதிகளில் வென்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து, முக்கிய கொள்கை முடிவுகளுக்கு வழிகாட்டி வந்தது. அவ்வாறு நாட்டின் அரசியலில் முக்கிய பங்கு வகித்த இடதுசாரிகளின் ஆட்சி தற்போது எந்த மாநிலத்திலும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.