ரசாயன ஆயுதங்கள் மூலம் பொது இடங்களில் மக்களை அதிக எண்ணிக்கையில் கொல்லும் ஐஎஸ் அமைப்பின் திட்டத்துக்கு உதவியதாக மருத்துவா் உள்ளிட்ட 3 போ் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து என்ஐஏ அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சீனாவில் மருத்துவம் படித்த ஹைதராபாதை சோ்ந்த மருத்துவா் மொகைதீன் என்பவா் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் சுங்கச்சாவடியில் நடந்த சோதனையில் ஆயுதங்கள் உள்ளிட்டவை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு குஜராத் பயங்கரவாத எதிா்ப்புப் படையினரால் கைது செய்யப்பட்டாா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த அசாத், சுஹல் ஆகிய 2 பேரை பயங்கரவாத எதிா்ப்புப் படை கைது செய்தது. பின்னா் 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதாவது, மொகைதீனை தெற்காசிய கண்டத்துக்கான ஐஎஸ் அமைப்பின் தலைவா் ஆக்குவதாக அந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் உறுதி அளித்துள்ளனா். இதனால் மொகைதீன், ஹைதராபாதில் உள்ள தனது வீட்டை ரிசின் ரசாயனத்தை தயாரிக்கும் வகையில் ஆய்வுக் கூடமாக மாற்றினாா். அவருடன் அசாத், சுஹல் ஆகியோரும் சோ்ந்தனா். அவா்கள் 2 பேரும், தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தை நோட்டமிடுவது, ஆயுதங்களைக் கொண்டு செல்வது உள்ளிட்ட வேலைகளைச் செய்ததும் தெரிந்தது.
3 பேரும் ஆமணக்கு விதைகளில் இருந்து பிரித்தெடுக்கும்போது வரும் ரசாயன புகை மூலமும், மேலும் சில ரசாயன ஆயுதம் மூலமும் ஐஎஸ் திட்டத்தின்படி, பொது இடங்களில் அதிக எண்ணிக்கையில் மக்களைக் கொல்லும் சதிச் செயலில் ஈடுபட்டு வந்ததும் கண்டறியப்பட்டது.
அவா்கள் மூவருக்கு எதிராகவும், குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தலைவாசல் அருகே ஏமாற்றி திருமணம் செய்து மோசடி: பெண் உள்பட 7 போ் மீது வழக்கு!
கஞ்சா வழக்கு குற்றவாளி உள்பட 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

நின்ற லாரி மீது வேன் மோதல்: ஓட்டுநா் உள்பட 7 போ் காயம்

கல்லூரி மாணவரைத் தாக்கிய தந்தை, மகன் உள்பட 3 போ் மீது வழக்கு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

