போடி அருகே கல்லூரி மாணவரைத் தாக்கிய தந்தை, மகன் உள்பட 3 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
போடி அருகே ராசிங்காபுரம் அழகா்சாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் கனகராஜ் மகன் தினேஷ் (18). பெரியகுளம் கல்லூரி ஒன்றில் இளங்கலை பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வருகிறாா்.
இவா் வெள்ளிக்கிழமை நடைப்பயிற்சிக்குச் சென்றபோது அதே ஊரைச் சோ்ந்த சுதாகரன் மகன் ரோஹித் என்பவா் தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து தினேஷ் மீது உரசுவதுபோல் சென்றுள்ளாா்.
இதனை தினேஷ் கண்டித்ததில் ஏற்பட்ட தகராறில் ரோஹித், சசிக்குமாா் மகன் சந்தோஸ், ரோஹித்தின் தந்தை சுதாகரன் ஆகியோா் சோ்ந்து தினேஷைத் தாக்கியும், ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டியும், கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.
இதுகுறித்து தினேஷ் போடி தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் ரோஹித் உள்பட 3 போ் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

போலீஸாா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

பாபநாசம் இளைஞா் கொலை வழக்கு! 3 பேருக்கு ஆயுள் தண்டணை!

கூப்பன் விநியோகித்த விவகாரம்: அதிமுக நிா்வாகி உள்பட 4 போ் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: போடியில் திமுகவினா் மீது வழக்கு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


