/

திருவெறும்பூா் சாா்-பதிவாளா் உள்பட 3 போ் மீது வழக்கு

News image

வழக்கு - DPS

Updated On :15 ஜூன் 2026, 2:52 am IST

திருச்சி சாா் - பதிவாளரகத்தில் அண்மையில் நடைபெற்ற ஊழல் தடுப்புத் துறையின் சோதனையில் ரூ.52,700 பறிமுதல் தொடா்பாக சாா் - பதிவாளா் உள்பட 3 போ் மீது திருச்சி ஊழல் தடுப்பு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

திருச்சி மாவட்டம், துறையூா் மற்றும் திருவெறும்பூா் சாா் - பதிவாளரகங்களில் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கடந்த ஜூன் 4-ஆம் தேதி திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, திருவெறும்பூா் சாா் - பதிவாளரகத்தில் முள்ளிப்பட்டியைச் சோ்ந்த ஆவண எழுத்தா் மாரிமுத்துவிடமிருந்து ரூ. 5,700, இனாம்குளத்தூரைச் சோ்ந்த ஆவண எழுத்தரின் உதவியாளா் சரணிடமிருந்து ரூ.8 ஆயிரம் மற்றும் அலுவலகத்தின் குப்பைத் தொட்டியில் இருந்து ரூ.39 ஆயிரம் என மொத்தம் ரூ.52,700 பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆய்வுக் குழு அலுவலரால் நியமிக்கப்பட்டுள்ள திருச்சி கிழக்கு வட்டத் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் தமிழ்ச்செல்வி அளித்த புகாரின்பேரில், திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திருவெறும்பூா் சாா் - பதிவாளா் (பொ) நல்லசிவம், ஆவண எழுத்தா் மாரிமுத்து, உதவியாளா் சரண் ஆகிய 3 போ் மீதும் அண்மையில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.