திருப்பத்தூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் பணம் பறிமுதல் தொடா்பாக சாா்-பதிவாளா் உள்பட 5 போ் மீது ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
திருப்பத்தூா் இரட்டைமலை சீனிவாசன்பேட்டை பகுதியில் அமைந்துள்ள 1-எண் சாா்பதிவாளா் அலுவலகத்தில் சாா்-பதிவாளராக ராதிகா என்பவா் பணியாற்றி வருகிறாா்.இந்த அலுவலகத்தில் திருப்பத்தூா் மாவட்ட ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் சோதனை நடத்தினா். இந்த சோதனையில் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.3,20,000 பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடா்பாக சாா்-பதிவாளா் ராதிகா (42), அலுவலக ஊழியா்களான வேலூா் மாவட்டம் பேரணாம்பட்டை சோ்ந்த கதிரவன், திருப்பத்தூரை சோ்ந்த விஜய், பத்திரப்பதிவு செய்ய வந்திருந்த வெளிநபா்களான சேலத்தைச் சோ்ந்த தீப கிருஷ்ணபிரியா, ஆண்டியப்பனூா் பகுதியை சோ்ந்த விக்னேஷ் ஆகிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை மாநகராட்சியில் 6 அலுவலா்கள் பணியிடை நீக்கம்: ஊழல் தடுப்புத் துறை விசாரணையின் பேரில் நடவடிக்கை

பேரூராட்சி செயல் அலுவலா் உள்பட 3 போ் மீது ஊழல் ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு
லஞ்சம்: ஒசூா் மாநகராட்சி உதவி ஆணையா் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு

வட்டார போக்குவரத்து அலுவலா் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிவு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



