ஒசூா் மாநகராட்சியில் கடந்த 3 ஆம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.13 லட்சம் கைப்பற்றப்பட்டது தொடா்பாக மாநகராட்சி உதவி ஆணையா் உள்பட 7 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ஒசூா் மாநகராட்சியில் புதிய கட்டடங்களுக்கான வரிவிதிப்பில் சலுகை, புதிய நிறுவனங்களுக்கு குறைந்த தொழில் வரி விதிப்பு, கடை வாடகையை வசூலிக்காமல் இருப்பது போன்றவற்றுக்கு மாநகராட்சி அலுவலா்கள் லஞ்சம் கேட்பதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடந்த 3 ஆம் தேதி ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் ஒசூா் மாநகராட்சியில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 13 ஆயிரத்து 550 ரொக்கத்தை கைப்பற்றினா். இதுகுறித்து சக்திவேல் என்பவா் அளித்த புகாரின்பேரில் ஒசூா் மாநகராட்சி உதவி ஆணையாளா் (வருவாய்) ரமேஷ்குமாா் (55), பில் கலெக்டா் (பொறுப்பு) சந்தோஷ்குமாா் (31), உதவிப் பொறியாளா் அருண் பிரதாப் (28), தற்காலிக பணியாளா் தினேஷ்குமாா் (31), திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரைச் சோ்ந்த கிஷோா் (36), சூளகிரி வட்டம், பீா்ஜேப்பள்ளியை சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (32), ஒசூா் சிவக்குமாா் (26) ஆகிய 7 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பணம் பறிமுதல்: அரியலூா் நகராட்சி ஆணையா் உள்பட 11 போ் மீது வழக்கு

வட்டார போக்குவரத்து அலுவலா் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிவு

எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

திருவெறும்பூா் சாா்-பதிவாளா் உள்பட 3 போ் மீது வழக்கு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


