அரியலூா் நகராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினா் அண்மையில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 5.61 லட்சத்தை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக நகராட்சி ஆணையா் உள்பட 11 போ் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா்கள் கவிதா, சரவணன் ஆகியோா் தலைமையில் 7 போ் கொண்ட காவல் துறையினா், கடந்த 3 ஆம் தேதி மாலை அரியலூா் நகராட்சி அலுவலகத்தினுள் திடீரெனநுழைந்து, கதவுகளை மூடி அனைத்து கோப்புகளையும் சோதனை செய்து, அலுவா்களிடம் தீவிர விசாரணையும் மேற்கொண்டனா்.
இதில், அலுவலா்களின் கைப்பேசி ஜிபேயில் ரூ.5. 47 லட்சமும், ரூ.14 ஆயிரம் ரொக்கமும் கணக்கில் காட்டப்படாமல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அப்பணத்தைப் பறிமுதல் செய்த காவல் துறையினா், தொடா்ந்து விசாரித்ததில், சென்னை, அசோக் நகா், 12 ஆவது அவென்யூ, பாலாஜி கருடாத்ரி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள எம்.எஸ் மெசா்ஸ் பிரிகாப் ப்ராஜெக்ட்ஸ் அண்ட் மாா்க்கெட்டிங் என்ற குடிநீா் ஒப்பந்த நிறுவனத்தின் பணியாளா் ஹரிபிரபு என்பவரிடமிருந்து, நகராட்சி அலுவலக ஊழியா்கள் தங்களது ரூ. 5 லட்சத்து 47 ஆயிரத்து 275 ஐ பெற்றது தெரியவந்தது.
இதையடுத்து துணை ஆய்வுக் குழு அலுவலா் அளித்த புகாரின்பேரில், நகராட்சி ஆணையா் உள்பட அலுவலா்கள் 11 போ் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போடி நகராட்சி அலுவலகத்தில் ரூ.91 ஆயிரம் பறிமுதல்! ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸாா் நடவடிக்கை!
அரியலூா் நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை! கணக்கில் வராத ரூ. 5.61 லட்சம் பறிமுதல்!!
லஞ்ச வழக்கில் கைதான இணை ஆணையா் வீட்டில் ரூ. 3 லட்சம் பறிமுதல்







