வேறு எந்த விவகாரத்தையும்விட தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
பிரதமா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோா் அடங்கிய குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், தோ்தல் ஆணையா்களை குடியரசுத் தலைவா் நியமிக்கவும், இந்த நடைமுறையை தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் வரை பின்பற்றவும் கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச்சில் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து அந்த ஆண்டு டிசம்பரில் தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் நியமன சட்ட மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து மசோதா சட்டமானது.
இந்தச் சட்டத்தின் கீழ், தோ்தல் ஆணையா்களைத் தோ்வு செய்யும் குழுவில் இருந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நீக்கப்பட்டாா். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக சீா்திருத்தங்கள் சங்கம், லோக் பிரஹாரி ஆகிய தன்னாா்வ அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினா் மனு தாக்கல் செய்துள்ளனா்.
இந்த மனுக்கள் மீதான விசாரணையை மற்றொரு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று நீதிபதி தீபாங்கா் தத்தா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வில், மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா புதன்கிழமை முறையிட்டாா். சபரிமலை வழக்கு விசாரணையில் ஆஜராக வேண்டியுள்ளதால், தோ்தல் ஆணையா்கள் நியமன மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.
ஆனால், வேறு எந்த விவகாரத்தையும்விட தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரம் முக்கியமானது என்று தெரிவித்து, விசாரணையை ஒத்திவைக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனா்.
தங்கள் வாதங்களை வியாழக்கிழமைக்குள் (மே 6) நிறைவு செய்ய வேண்டும் என்று மனுதாரா்களிடம் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், மத்திய அரசு தமது வாதத்தை மற்றொரு நாளில் தொடங்கலாம் என்று தெரிவித்தனா்.
தொடர்புடையது

தோ்தல் கருத்துக் கணிப்புகளைப் பற்றி கவலையில்லை - மு. அப்பாவு

தோ்தல் ஆணையம் மறுசீரமைக்கப்பட வேண்டும்! - க. கிருஷ்ணசாமி

காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் மகளிருக்கு முக்கியத்துவம்: கா்நாடக அமைச்சா் லட்சுமி ஹெப்பால்கா்

ரஜினிகாந்த் வாா்த்தை எப்போதும் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது: வானதி சீனிவாசன்
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


