15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

இந்தியா-சுரிநாம் உறவு குடும்பப் பிணைப்பில் வேரூன்றியுள்ளது: அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியா-சுரிநாம் உறவு குடும்பப் பிணைப்பில் வேரூன்றியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :7 மே 2026, 5:46 am IST

இந்தியா-சுரிநாம் உறவு குடும்பப் பிணைப்பில் வேரூன்றியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஒன்பது நாள் பயணமாக கரீபியன் நாடுகளான ஜமைக்கா, சுரிநாம், டிரினிடாட் - டொபேகோவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், முதலில் ஜமைக்கா சென்றார். இதைத் தொடர்ந்து அவர் புதன்கிழமை சுரிநாம் சென்றடைந்தார்.

அந்நாட்டு நாளிதழில் அவர் எழுதிய கட்டுரையில், "இந்தியா-சுரிநாம் இடையிலான உறவு உள்கட்டமைப்பு, வர்த்தகம், பண்பாட்டுத் தொடர்புகளை உள்ளடக்கிய வலுவான, பன்முகத்தன்மை கொண்ட உறவாக விரிவடைந்துள்ளது.

சுரிநாமில் பல வளர்ச்சித் திட்டங்கள் இந்தியாவின் கடனுதவியுடன் நிறைவு செய்யப்பட்டுள்ளன. சுரிநாமின் உணவுப் பாதுகாப்புக்காக கடந்த ஆண்டு 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.94.32 கோடி) மதிப்பு கொண்ட 425 மெட்ரிக் டன் உணவுப் பொருள்களை இந்தியா விநியோகித்தது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் உள்பட பல விவகாரங்களில் இந்தியா-சுரிநாமின் நிலைப்பாடு ஒன்றாகவே இருந்துள்ளது.

சுரிநாமை தொலைதூரத்தில் உள்ள கூட்டாளியாக இந்தியா பார்க்கவில்லை. மாறாக, சுரிநாமை தனது குடும்பமாக இந்தியா பார்க்கிறது. இந்தியா-சுரிநாம் உறவு குடும்பப் பிணைப்பில் வேரூன்றியுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.