ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!விஜய் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தம்! பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் உறுதிக்குத் தீர்க்கமான சான்று! குடியரசுத் தலைவர்

ஆபரேஷன் சிந்தூர் பற்றிக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவிப்பது..

News image

திரௌபதி முர்மு - file photo

Updated On :7 மே 2026, 0:32 pm IST

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிக்கு ஆபரேஷன் சிந்தூர் தெளிவான சான்றாக விளங்குவதாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து முர்மு வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

ஓராண்டுக்கு முன்பு, நமது ஆயுதப் படையினர் சிந்தூர் நடவடிக்கையின் இணையற்ற வெற்றி, நமது ஆயுதப் படைகளின் தைரியத்தையும் உறுதியையும் பிரதிபலிக்கிறது.

பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதலுக்கு, தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. பயங்கரவாதத்திற்கும், நமது இறையாண்மை மற்றும் குடிமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் அனைத்து சக்திகளுக்கும் எதிராக இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிக்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு தெளிவான சான்றாக விளங்குகிறது.

தேசத்தை அச்சுறுத்த நினைப்பவர்களுக்கு, நமது தேசம் விழிப்புடனும், ஒற்றுமையுடனும், வலிமையுடன் பதிலடி கொடுக்கத் தயாராகவும் நிற்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இன்று, நமது வீரர்களின் அசைக்க முடியாத வீரம், தியாகம் மற்றும் தொழில்முறை திறனுக்கு தேசம் வணக்கம் செலுத்துகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ஏப்ரல் 22, 2025 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்தத் தாக்குதலில், சுற்றுலாப் பயணிகளான 26 பேர், மூன்று பாகிஸ்தானிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

சிந்தூர் நடவடிக்கை நாட்டின் பாதுகாப்புப் படைகளால், பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத மற்றும் ராணுவ தளங்களைக் குறிவைத்து, மே 7 முதல் 10, 2025 வரை மேற்கொள்ளப்பட்டது.

Summary

President Droupadi Murmu on Thursday said that Operation Sindoor is a defining testament to India's unwavering resolve against terrorism and that the country stands vigilant, united and prepared to respond with strength to those who seek to threaten "Bharat".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.