ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஓராண்டு நிறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "ஓராண்டுக்கு முன்பு, நமது ஆயுதப் படையினர் சிந்தூர் நடவடிக்கையின்போது, இணையற்ற தைரியத்தையும், துல்லியத்தையும், உறுதியையும் வெளிப்படுத்தினர். பஹல்காமில் அப்பாவி இந்தியர்களைத் தாக்கத் துணிந்தவர்களுக்கு நம் ஆயுதப் படை தகுந்த பதிலடி கொடுத்தனர். அத்தகைய நம் படைகளின் வீரத்தை ஒட்டுமொத்த தேசமும் வணங்குகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான பதிலடி மற்றும் நாட்டின் பாதுகாப்பைப் உறுதிசெய்வதில் அசைக்க முடியாத நிலைப்பாட்டை, ஆபரேஷன் சிந்தூர் வெளிக்கொணர்ந்தது. மேலும், நமது படைகளின் தொழில்முறை, ஆயத்த நிலை, ஒருங்கிணைந்த வலிமையையும் சிந்தூர் எடுத்துரைத்தது.
பயங்கரவாதத்தை தோற்கடித்து, அதனை அழிப்பதற்கான நமது தீர்மானத்தில் நாம் எப்போதும்போல உறுதியாக இருக்கிறோம்.
ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா அடைந்த அசாதாரண வெற்றி, நமது துணிச்சலான வீரர்களின் குறிப்பிடத்தக்க வீரம், தேசபக்திக்கு எடுத்துக்காட்டு. நம் வீரர்களின் வெல்ல முடியாத தைரியம், அசைக்க முடியாத உறுதிப்பாடு, கடமைக்கான அர்ப்பணிப்பை எண்ணி நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெருமிதம் கொள்கிறார்" என்று கூறியுள்ளார்.
Summary
One year of Operation Sindhoor: The entire nation salutes our forces for their valour, says PM Modi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சர்வதேச யோகா நாள் விழா! பிரதமர் மோடி பங்கேற்பு! | Yoga | Modi
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர்க் கப்பல்கள்: நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

மாலுமிகள் பாதுகாப்பு: டிரம்ப்பிடம் பிரதமர் மோடி கேள்வி!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




