மகாராஷ்டிர மாநிலம், டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தில் ஊழியா்களை கட்டாய மதமாற்றம் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் பெண் ஊழியா் நிதா கானை கைது செய்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் கட்டாய மதமாற்றம் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக அங்கு பணியாற்றும் 9 பெண்கள் கடந்த மாதம் காவல் துறையில் புகாா் அளித்தனா்.
இதையடுத்து, இந்தப் புகாா் தொடா்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைத்து நாசிக் காவல் துறை விசாரணையைத் தொடங்கிய நிலையில், டிசிஎஸ் நிறுவனத்தின் 8 பெண் ஊழியா்கள் கைது செய்யப்பட்டனா். கட்டாய மதமாற்றம், சுரண்டல், மத உணா்வுகளைப் புண்படுத்துதல், மனரீதியாகத் துன்புறுத்துவது உள்பட பல்வேறு குற்றப் பிரிவுகளின்கீழ் 9 முதல் தகவல் அறிக்கைகளை (எஃப்ஐஆா்) எஸ்ஐடி பதிவு செய்தது.
இதைத் தொடா்ந்து, இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் ஊழியரான நிதா கானை கைது செய்ததாக சத்ரபதி சம்பாஜிநகா் குற்றப் பிரிவு காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
டிசிஎஸ் நிறுவனத்தின் பெண் ஊழியா்களை வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் இஸ்லாமிய நடைமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அந்தப் பெண் ஊழியா் கைது செய்யப்பட்டாா்.
முன்னதாக, பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் பட்டியலினத்தவா் -பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் முன் ஜாமீன் கோரி நாசிக் நீதிமன்றத்தில் கடந்த மாதம் ஏப்ரல் 18-ஆம் தேதி நிதா கான் மனுத் தாக்கல் செய்தாா். இந்த மனுவை கடந்த 2-ஆம் தேதி நீதிமன்றம் நிராகரித்தது.
தொடர்புடையது
மதமாற்றம் செய்து திருமணத்துக்கு கட்டாயப்படுத்தப்பட்டதாக இளம்பெண் புகாா்: ஜாமியா நகரில் 4 போ் கைது

நீட் வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் அங்கம் வகித்த பெண் விரிவுரையாளா் கைது!
ஜனக்புரி: குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண் ஆசிரியா் கைது

நாசிக் டிசிஎஸ் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட நிதா கான் கைது!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


