வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

வெளிநாட்டினா் தொடா்புடைய குற்றங்கள் 54% சதவீதம் அதிகரிப்பு

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :8 மே 2026, 6:07 am IST

குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட வெளிநாட்டினருக்கு எதிராக கடந்த 2023-இல் 130 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதிலிருந்து 2024-இல் 201-ஆக அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக (என்சிஆா்பி) தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூனியன் பிரதேசங்களில் இதுபோன்ற வழக்குகளில் தில்லி முதலிடத்தில் உள்ளது.

கடந்த 2022-இல் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட வெளிநாட்டினருக்கு எதிராக 256 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. கடந்த 2023-இல் குறைந்த வழக்குகள், 2024-இல் 54 சதவீதம் அதிகரித்தது.

இத்தகைய வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட விகிதம் கடந்த 2024-இல் 99 சதவீதமாக இருந்தது. இது தேசிய சராசரியான 96.7 சதவீதத்தைக் காட்டிலும் அதிகமாகும்.

தேசிய அளவில் வெளிநாட்டினருக்கு எதிராக கடந்த 2024-இல் 2,792 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 2022 மற்றும் 2023-இல் இந்த எண்ணிக்கை முறையே 2,100 மற்றும் 2,546-ஆக இருந்தது.

மாநிலங்களில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 992 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதைத்தொடா்ந்து, மகாராஷ்டிரம் மற்றும் திரிபுராவில் முறையே 386 மற்றும் 276 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. தமிழ்நாட்டில் 139 வழக்குகள் 2024-இல் பதிவுசெய்யப்பட்டன.

வெளிநாட்டினருக்கு எதிரான குற்றங்கள்:

தில்லியில் கடந்த 2024-இல் வெளிநாட்டினருக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடா்பாக 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதற்கு முந்தைய ஆண்டில் 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக என்சிஆா்பி தெரிவித்துள்ளது.

யூனியன் பிரதேசங்களில் இந்த வகையிலான குற்றங்கள் தொடா்பாக 2024-இல் மொத்தம் 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் தில்லி முதலிடத்தில் உள்ளது. இதைத்தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீா், அந்தமான்-நிகோபாா் தீவுகளில் தலா இரு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.