குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

நீதி ஆயோக் துணைத் தலைவராக அசோக் குமார் லஹிரி பொறுப்பேற்பு!

புதிதாக பொறுபேற்ற நீதி ஆயோக் துணைத் தலைவர் பற்றி..

Ashok Kumar Lahiri

அசோக் குமார் லஹிரி - x.com

Published On :8 மே 2026, 3:42 pm IST

நீதி ஆயோக் (மத்திய கொள்கைக் குழு) துணைத் தலைவராக அசோக் குமார் லஹிரி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

சுமன் பெர்ரிக்குப் பதிலாக அசோக் குமார் லஹிரி இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

நீதி ஆயோக் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அசோக் லஹிரி மேற்கு வங்க பாஜக எல்எல்ஏவும், மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும், 15-வது நிதிக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

இதுதொடர்பாக நீதி ஆயோக் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

அசோக் குமார் லஹிரி கல்வித் துறை, பொது நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் எனப் பல்வேறு தளங்களில் அவருக்குள்ள அனுபவம், ஆதாரம் சார்ந்த கொள்கை உருவாக்கம் மற்றும் பொருளாதார மாற்றத்தை நோக்கிய நீதி ஆயோக்கின் முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும்.

இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதிலும், பல்வேறு துறைகள் சார்ந்த உத்திசார் கொள்கை முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிப்பதிலும் அசோக் லஹிரியின் பங்களிப்புகளை நீதி ஆயோக் ஆவலுடன் எதிர்நோக்குகிறது என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Renowned economist Ashok Kumar Lahiri on Friday took charge as Vice Chairman of NITI Aayog.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.