அறுவை சிகிச்சை செய்திருந்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று நலம் விசாரித்தார்.
உடல்நலக் குறைவு காரணமாக ஆந்திர துணை முதல்வரும் ஜன சேனை தலைவருமான பவன் கல்யாணுக்கு கடந்த மாதம் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
பவன் கல்யாண் தொடர்ந்து அரசியல் கூட்டங்களில் பங்கேற்று வந்த நிலையில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவர்களின் ஆலோசனையின் கீழ் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முழுமையாகக் குணமடைய அதிக காலம் எடுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்த நிலையில் அறுவைச் சிகிச்சை முடிந்து அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்துள்ள பவன் கல்யாண் வீட்டில் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.
இவரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த வாரம் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று பவன் கல்யாண் வீட்டிற்கு நேரில் சென்று அவரை நலம் விசாரித்தார்.இதுபற்றி அவர் வெளியிட்ட பதிவில், “ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இல்லத்திற்குச் சென்று, அவரையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்தேன். பவன் கல்யாணை நலம் விசாரித்து, அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்தினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Prime Minister Modi personally visited Pawan Kalyan to inquire about his well-being
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி, ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்!
அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அறுவைச் சிகிச்சை

மறுவரையறை மசோதா! விவாதம் செய்யத் தயாரா? - ஆந்திர துணை முதல்வருக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் சவால்!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

