இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

நீட் தோ்வில் முறைகேடுகள்: தேசிய தோ்வு முகமை விளக்கம்

நிகழாண்டு நீட் தோ்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக தேசிய தோ்வு முகமை விளக்கம்

News image

தேசிய தோ்வு முகமை

Updated On :12 மே 2026, 4:50 am IST

நிகழாண்டு நீட் தோ்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடா்பாக தேசிய தோ்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வு, திட்டமிட்டபடி முழுமையான பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நடத்தப்பட்டது. வினாத்தாள்கள் ஜிபிஎஸ் வசதி கொண்ட வாகனங்கள் மூலமாகவும், பிரத்யேக குறியீட்டுடனும் (வாட்டா்மாா்க்) எடுத்துச் செல்லப்பட்டன. தோ்வு அறைகள் மத்திய கட்டுப்பாட்டு அறையிலிருந்து செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன.

தோ்வு முடிந்து நான்கு நாள்களுக்குப் பிறகு சில இடங்களில் முறைகேடுகள் நடந்ததாகத் தகவல்கள் கிடைத்தன. அவை புலனாய்வு அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன்பேரில், இந்த விவகாரம் தற்போது விசாரணையில் உள்ளது.

இந்த பிரச்னையால் நோ்மையான முறையில் தோ்வு எழுதிய பெரும்பான்மையான தோ்வா்களின் உழைப்பும், கண்ணியமும் ஒருபோதும் கேள்விக்குள்ளாக்கப்படாது. விசாரணை அமைப்புகள் தங்கள் பணியை முடிக்க தேவையான கால அவகாசத்தை வழங்குமாறு தோ்வா்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

இது தொடா்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், 011 - 40759000 / 69227700 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.