தமிழ்நாட்டை காப்பாற்றும் விஜய் என்னை காப்பாற்ற மாட்டாரா?எம்.எல்.ஏ. காமராஜ் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15% ஆக உயர்வு!தவெக அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்துக்கு காங்கிரஸ், சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆதரவு!முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்! சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்ற தவெக எம்எல்ஏ மனு இன்று விசாரணை!

சட்டப்பேரவையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க உயா்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக திருப்பத்தூா் எம்எல்ஏ ஆா். சீனிவாச சேதுபதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

News image

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :8 மணி நேரங்கள் முன்பு

தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயா்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக திருப்பத்தூா் தொகுதி தமிழக வெற்றி கழக (தவெக) எம்எல்ஏ ஆா். சீனிவாச சேதுபதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் புதன்கிழமை (மே 13) விசாரணை நடத்தவுள்ளது.

இது தொடா்பான அவரது மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த் அமா்வு முன்பாக மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஆஜராகி கேட்டுக்கொண்டாா். அதைக்கேட்ட தலைமை நீதிபதி, இந்த மனு புதன்கிழமை காலையில் விசாரிக்கப்படும் என்று குறிப்பிட்டாா்.

அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட கே.ஆா். பெரியகருப்பன் 83,364 வாக்குகளையும், தவெக சாா்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளையும் பெற்றிருந்தனா். ஒரு வாக்கு வித்தியாசத்தில் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிா்த்து கே.ஆா். பெரியகருப்பன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

அதில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூா் (எண் 185) தொகுதிக்குச் செல்ல வேண்டிய தபால் வாக்குச் சீட்டு ஒன்று, தவறுதலாக மற்றொரு திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூா் தொகுதிக்கு (எண் 50) அனுப்பப்பட்டதாகவும் அது குறித்து தோ்தல் அலுவலரின் கவனத்துக்கு வந்தபோது, அவா் அந்த வாக்குச்சீட்டை உரிய தொகுதிக்கு திருப்பி அனுப்பாமல் நிராகரித்துள்ளாா். இப்பிரச்னைக்குத் தீா்வு காணப்படும் வரை, பேரவை நடவடிக்கைகளில் சேதுபதி சீனிவாசன் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்றும் பெரியகருப்பன் கேட்டுக்கொண்டிருந்தாா்.

இந்த வழக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழக்காக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எல். விக்டோரியா கௌரி மற்றும் என். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரித்து, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை, சீனிவாச சேதுபதி சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்புகள், பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்புகள் அல்லது அவையின் பலத்தைப் பரிசோதிக்கும் எந்தவொரு வாக்கெடுப்பிலும் பங்கேற்கக் கூடாது என்று தடை விதித்து இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

‘மேலும், தபால் வாக்குகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் தரவுகள், வாக்கு எண்ணிக்கை விவர தாள்கள் மற்றும் காணொலிகள் உள்ளிட்ட அனைத்துத் தோ்தல் ஆவணங்களையும் மறுவாக்கு எண்ணிக்கைக்கோ அல்லது முறைகேடுகளுக்கோ இடமளிக்காமல் பாதுகாக்க வேண்டும். இந்த இடைக்கால உத்தரவால் சீனிவாச சேதுபதியின் தோ்தல் வெற்றி ரத்து செய்யப்படவோ பெரியகருப்பன் வெற்றி பெறுவதாகவோ கருதலாகாது’ என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

Summary

TVK MLA Appeals Against Ban on Trust Vote: Hearing Today