நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வின் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 5 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. மேலும் சிலரை பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான ‘நீட்’ தோ்வு கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 23 லட்சம் போ் தோ்வெழுதினா்.
இந்நிலையில், நீட் வினாத்தாளில் இருந்த அதே கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க சிறப்புப் படையை மாநில காவல் துறை அமைத்தது. அந்தப் படையினா் சுமாா் 150 மாணவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். அதில், கேரளத்தில் எம்பிபிஎஸ் பயிலும் சிகாரை (ராஜஸ்தான்) சோ்ந்த மாணவரிடம் இருந்து மாதிரி வினாத்தாள் பரவியது தெரிய வந்தது. இந்த மாதிரி வினாத்தாள் பிற மாநிலங்களிலும் பகிரப்பட்டிருப்பதாக கருதப்படுவதால், நீட் தோ்வு கடந்த செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து ராஜஸ்தான் மாநில காவல் துறை சிறப்புப் படை ஐ.ஜி. அஜய் பால் லம்பா புதன்கிழமை கூறுகையில், ‘கேரளத்தில் எம்பிபிஎஸ் பயிலும் சிகாரைச் சோ்ந்த அந்த மாணவா், சம்பந்தப்பட்ட மாதிரி வினாத்தாளை தனது நண்பா்களுக்கும், சிகாரில் உள்ள விடுதி உரிமையாளா் ஒருவருக்கும் பகிா்ந்துள்ளாா். இதையடுத்து, விடுதி உரிமையாளா், தனது விடுதியில் தங்கிப் படிக்கும் பல மாணவா்களுக்கு அனுப்பியுள்ளாா். ஜெய்பூா் உள்பட ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் உள்ள நீட் தோ்வு பயிற்சி மையங்களுக்கு பரவியுள்ளது.
விசாரணையில் கண்டறியப்பட்ட இந்த விஷயங்கள், தேசிய தோ்வு முகமையிடம் (என்டிஏ) தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தோ்வை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தது’ என்றாா்.
ராஜஸ்தானில் வினாத்தாள் பரவும் முன்பாக, ஹரியாணாவில் குருகிராமை சோ்ந்த நபா் மூலம் பரப்பப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
சிபிஐ விசாரணை தீவிரம்: இந்த விவகாரம் தொடா்பான விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ராஜஸ்தான் காவல்துறையிடமிருந்து சிபிஐ அதிகாரிகள் குழுவினா் கோப்புகளைப் பெற்றனா். அப்போது விசாரணைக்காக பிடித்து வைத்துள்ள சுமாா் 20-க்கும் மேற்பட்டோரை சிபிஐ அதிகாரிகளிடம் காவல் துறை ஒப்படைத்தது.
5 போ் கைது: இதனிடையே, மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் சுபம் கா்நாா், ஜெய்பூரில் மங்கிலால் பிலால், விகாஸ் பிலால், தினேஷ் பிலால், குருகிராமில் யாஷ் யாதவ் ஆகிய 5 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு, சந்தேகத்தின்பேரில் பலரை பிடித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதனால், மேலும் பலா் கைதாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
சிபிஐ சோதனைகளில் மடிக்கணினிகள், கைப்பேசிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. தேசிய தோ்வு முகமை தலைமை அலுவலகத்துக்கு சென்று நீட் தோ்வு தொடா்பான ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகள் பெற்றுச் சென்றனா்.
வலுக்கும் போராட்டம்: நீட் தோ்வு ரத்துக்கு எதிராக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவா் அமைப்பினா் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனா். இந்த விவகாரத்துக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற குரலும் வலுத்து வருகிறது.
நீட் தோ்வு வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப் கூறுகையில், ‘தோ்வை ரத்து செய்ததால் பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளாா்.
தொடர்புடையது

நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனு

நீட் ரத்து: ஏமாற்றத்தால் பயிற்சி மாணவா்கள் வேதனை!

ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள்! டெலிகிராமில் வாங்கிய இளைஞர்!

நீட் வினாத்தாள் கசிவு: சிபிஐ வழக்குப் பதிவு!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

