ஒரே நாளில் அமித் ஷாவை சந்தித்த பாஜக முதல்வர்கள்!

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பாஜக முதல்வர்கள் சந்தித்துள்ளது குறித்து...

up,mp cms with amit shah

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்... - படம் | எக்ஸ்

Published On :

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர்.

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (மே 14) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பில், மாநில பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் மற்றும் துணை முதல்வர் விஜய் சர்மா ஆகியோர் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையடுத்து, மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் மோகன் யாதவ் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த நிலையில், ஒரே நாளில் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை சந்தித்துள்ளது பெருமளவில் கவனம் பெற்றுள்ளது. இருப்பினும், இந்தச் சந்திப்புகளுக்கான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

Summary

The CMs of Uttar Pradesh, Madhya Pradesh, and Chhattisgarh met Union Home Minister Amit Shah in person in Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.