அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தந பிஸ்வ சர்மாவின் மனைவி ரினிகி புயன் சர்மா தொடர்ந்த வழக்குகள் தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர் பவன் கேரா தொடர்ந்து இரண்டாவது நாளாக அஸ்ஸாம் கவால்துறை குற்றப்பிரிவு முன்பு ஆஜரானார்.
முதல்வரின் மனைவி ரினிகி புயன் பல கடவுச்சீட்டுகளும், வெளிநாடுகளில் சொத்துக்களை வைத்திருப்பதாகப் பவன் கேரா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
முன்னதாக புதன்கிழமையன்று காவல்துறையின் குற்றப்பிரிவில் ஆஜரான பவன் கேராவிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியதுடன், இன்று மீண்டும் ஆஜராகுமாறு குற்றப்பிரிவு போலீஸார் அவருக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து, ஆஜராவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய பவன் கேரா, "நான் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். இன்றும் அவ்வாறே ஒத்துழைப்பேன்" என்று அவர் தெரிவித்தார்.
விசாரணை தொடர்பான விவரங்களை அவர் வெளியிடவில்லை. விசாரணை முழுவதும் நிறைவடைந்த பின்னரே இது குறித்துப் பேசுவேன் என்று அவர் கூறினார்.
புதனன்று இரவு குற்றப்பிரிவு அலுவலகத்தின் வெளியே வந்த அவர் கூறியதாவது,
நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். அரசியலமைப்புச் சட்டம் நடைமுறையில் இருப்பதால், அதற்கு ஒத்துழைப்பது எனது கடமையாகும். நான் அதைக் கட்டாயம் கடைப்பிடிப்பேன் என்று அவர் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக முதல்வர் ஹிமந்த கூறியதாவது,
சட்டம் தன் கடமையைச் செய்யும். பவன் கேரா சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என மத்திய அரசிடமிருந்து நாங்கள் ஏற்கெனவே எழுத்துப்பூர்வமான தகவலைப் பெற்றுள்ளோம்.
எனவே, காவல்துறையின் விசாரணைகள் அதிக காலம் எடுத்துக்கொள்ளாது, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய இயலும் என அவர் தெரிவித்தார்.
Summary
Congress leader Pawan Khera appeared before Assam Police Crime Branch here on Thursday for the second consecutive day in connection with the cases filed by Chief Minister Himanta Biswa Sarma's wife, Riniki Bhuyan Sharma.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பவன் கேராவுக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பவன் கேரா சிங்கமல்ல... நனைந்த பூனை: பாஜக விமர்சனம்!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

அஸ்ஸாம் முதல்வா் மனைவியை விமா்சித்த வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவா் பவன் கேராவுக்கு தெலங்கானா உயா்நீதிமன்றம் முன் ஜாமீன்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு


