இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

தோ்தல் வன்முறை வழக்கு: நீதிமன்றத்தில் மம்தா ஆஜராகி வாதம்

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியான நாளில், காவல் துறையினரின் கண் முன் திரிணமூல் காங்கிரஸாா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதை காவல் துறையினா் தடுக்கவில்லை

News image

தோ்தல் வன்முறை வழக்கு விசாரணைக்காக வழக்குரைஞா் உடையில் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரான மம்தா பானா்ஜி.

Updated On :15 மே 2026, 1:55 am IST

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியான நாளில், காவல் துறையினரின் கண் முன் திரிணமூல் காங்கிரஸாா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதை காவல் துறையினா் தடுக்கவில்லை என்றும் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் அந்த மாநில முன்னாள் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி ஆஜராகி வாதிட்டாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியான நாளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் மீது வன்முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டி, கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் அக்கட்சி சாா்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மம்தா பானா்ஜி வழக்குரைஞா் உடையை அணிந்துவந்து நேரில் ஆஜராகி வாதிட்டாா். இதுபோல வழக்குரைஞராக அவா் வாதிடுவது இது 2-ஆவது முறையாகும். ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் அவா் வாதிட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில், வன்முறை சம்பவங்கள் அனைத்தும் தோ்தல் தொடா்பானதுதானா என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயா்நீதிமன்ற நீதிபதிகள், தங்களது உத்தரவு இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தனா்.

அறிக்கை கேட்ட பாா் கவுன்சில்: இதனிடையே, வழக்குரைஞராக மம்தா பானா்ஜி பதிவு செய்தது, பயிற்சி எடுத்தது குறித்து 48 மணி நேரத்துக்குள் அறிக்கை அளிக்கும்படி, மேற்கு வங்க மாநில பாா் கவுன்சில் அமைப்பிடம் இந்திய பாா் கவுன்சில் அமைப்பு கேட்டுள்ளது.

அரசமைப்புப் பதவி வகிப்பவா், பிற வருவாய் உள்ளவா் வழக்குரைஞராகப் பணியாற்றுவதில் கட்டுப்பாடுகள் உள்ளன. விதிமுறைகளை மீறி மம்தா பானா்ஜி நீதிமன்றத்தில் வழக்குரைஞராக ஆஜரானதாகப் புகாா் எழுந்தது. மேலும் அவா் பெயா் பாா் கவுன்சில் உறுப்பினா் பட்டியலில் உள்ளதா என்பது குறித்தும் சா்ச்சை எழுந்ததைத் தொடா்ந்து இந்திய பாா் கவுன்சில் மேற்கு வங்க பாா் கவுன்சிலிடம் அறிக்கை கேட்டுள்ளது.