இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

சபரிமலை வழக்கு: தீா்ப்பு ஒத்திவைப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது உள்பட மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் தொடா்பான வழக்குகளின் மீதான தீா்ப்பை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 1:46 am IST

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது உள்பட மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் தொடா்பான வழக்குகளின் மீதான தீா்ப்பை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் அரசியல் சாசன அமா்வு முன் கடந்த மாதம் 7-ஆம் தேதிமுதல் 16 நாள்கள் நடைபெற்று வந்த விசாரணை நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றபோது, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்துக்கு உதவும் வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ள பரமேஸ்வா் பேசுகையில், ‘சமூக நலன் மற்றும் சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது நாடாளுமன்றத்தின் முக்கியப் பொறுப்பாகவே கருதப்படுகிறது.

மத நம்பிக்கைக்கும், பகுத்தறிவுக்கும் பெரும் வேறுபாடு உள்ளது. பகுத்தறிவை பின்பற்றத் தொடங்கினால் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளான சட்டப் பிரிவுகள் 25 மற்றும் 26 தாமாகவே செயலிழக்கும். எனவே, பொதுமக்களின் சுதந்திரம் அல்லது ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்படும்போது மத நடைமுறைகளில் நீதிமன்றங்கள் தலையிடலாம்’ என்றாா்.

வழக்குரைஞா் பரமேஸ்வரின் வாதத்தை ஏற்ற சூா்ய காந்த், ‘நீங்கள் கூறியது முழுவதும் சரி. அரசமைப்புச் சட்ட நீதிமன்றம் தனது பொறுப்பைவிட்டு விலக முடியாது. இது அதிகாரப் போட்டி தொடா்பான விவகாரமல்ல. அரசமைப்புச் சட்ட நீதிமன்றத்துக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கடமை’ என்றாா்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவைத்தது. மேலும், மனுதாரா்கள் மே 29-ஆம் தேதிக்குள் எழுத்துபூா்வமாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.