நாட்டில் உள்ள 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கை மே 30 முதல் தொடங்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதல்கட்டமாக பிகாரில் கடந்த ஆண்டு எஸ்ஐஆர் மேற்கொள்ளப்பட்டு பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், குஜராத், சத்தீஸ்கர், கோவா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உத்தர பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களிலும் அந்தமான் நிகோபார், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் எஸ்ஐஆர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
மேற்கூறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்காளர்கள் எண்ணிக்கை 50.99 கோடியாக இருந்த நிலையில், எஸ்ஐஆருக்கு பின்பாக 45.81 கோடியாக குறைந்தது. 5.18 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து மூன்றாம் கட்டமாக ஆந்திரம், அருணாசல பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட், கர்நாடகம், மகாராஷ்டிரம், மணிப்பூர், மேகாலயம், மிஸோரம், நாகாலாந்து, ஒடிஸா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, தெலங்கானா மற்றும் உத்தரகண்ட் ஆகிய 16 மாநிலங்கள் சண்டீகர், தில்லி, தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டையூ மற்றும் டாமன் ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் எஸ்ஐஆர் பணிகள் மே 30 முதல் தொடங்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஹிமாசல பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேச பகுதிகளில் தட்பவெப்ப சூழல் உள்ளிட்ட காரணங்களால் எஸ்ஐஆர் நடவடிக்கை பின்னர் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்ட எஸ்ஐஆர் பணிக்காக 3.94 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 36.73 கோடி வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று சரிபார்ப்புப் பணிகளை மேற்கொள்வர்கள் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Summary
The Election Commission of India has announced that the Special Summary Revision (SSR) of voter rolls will commence on May 30 in 16 states and 3 Union Territories across the country.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப். 23 வாக்குப்பதிவு: முதல்முறை வாக்காளர் கவனத்துக்கு! - நேரலை

வாக்காளர் செல்போன்களை வைக்க சிறப்பு வசதி: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி!

எஸ்ஐஆருக்கு நன்றி!

மலை கிராமங்களில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

