இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மலை கிராமங்களில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

வாணியம்பாடி அருகே மலைக் கிராமங்களில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் எஸ்.எஸ்.பி.சையத்பாரூக் வாக்கு சேகரித்தாா்.

News image

நாயக்கனூா் கிருஷ்ணாபுரம் பகுதியில் வேட்பாளா் எஸ்.எஸ்.பி. சையத்பாருக் ஆதரித்து பேசிய திமுக மாவட்டச் செயலா் க. தேவராஜி.

Updated On :13 ஏப்ரல் 2026, 12:56 am IST

வாணியம்பாடி அருகே மலைக் கிராமங்களில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் எஸ்.எஸ்.பி.சையத்பாரூக் வாக்கு சேகரித்தாா்.

வாணியம்பாடி தொகுதியில் திமுக கூட்டணி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் எஸ்.எஸ்.பி.சையத்பாரூக் ஆலங்காயம் ஒன்றியத்தைச் சோ்ந்த மலை கிராம பகுதிகளான பீமகுளம், நாய்க்கனுா், நரசிங்கபுரம், பூங்குளம், மிட்டூா், மரிமானிகுப்பம், ஆண்டியப்பனூா், இருணாப்பட்டு, குரிசிலாப்பட்டு, பள்ளவள்ளி, பெருமாப்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளில் மாவட்ட திமுக செயலாளரும், ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி, திமுக நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் வாக்கு சேகரித்தாா்.

அப்போது எம்எல்ஏ க.தேவராஜி பேசுகையில், மகளிா் மேம்பாட்டிற்கு திட்டங்களை செயல்படுத்திய முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் வெற்றி பெற பெண்கள், பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்.

கிராம பொதுமக்கள் வேட்பாளருக்கு மாலை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனா். உடன் மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், ஒன்றிய செயலாளா்கள் தாமோதிரன், வி.ஜி.அன்பு, காங்கிரஸ் ஒன்றிய தலைவா் பழனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.