நெதர்லாந்து நாட்டில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி ஸ்வீடன் நாட்டுக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக, கடந்த வெள்ளிக்கிழமை (மே 15) அன்று நெதர்லாந்து நாட்டுக்குச் சென்றார். பிரதமர் மோடியின் இந்த 2 நாள் பயணத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கு இடையேயான கூட்டுறவுகள் குறித்தவை எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பயணத்தில் நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனை அவர் நேரில் சந்தித்து உரையாடினார்.
இதனைத் தொடர்ந்து, நெதர்லாந்தின் எரிசக்தி, துறைமுகம், சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து உரையாடினார்.
இந்த நிலையில், நெதர்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை (மே 17) மதியம் ஸ்வீடன் நாட்டுக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புறப்படும் முன்னர் அந்நாட்டின் புகழ்பெற்ற அஃப்ஸ்லூய்ட்ஜைக் எனும் அணையை பிரதமர் ஜெட்டனுடன் இணைந்து நேரில் பார்வையிட்டார்.
இத்துடன், கடந்த 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக ஸ்வீடன் நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். ஐரோப்பிய நாடுகள் உடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக பிரதமர் மோடி இந்தப் பயணங்களை மேற்கொள்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Summary
PM Modi has departed from the Netherlands for Sweden.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









