நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

பதவியேற்ற முதல் நாளே..! கேரள முதல்வர் சதீசன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

கேரள முதல்வர் வி.டி. சதீசன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது குறித்து...

News image

கேரள முதல்வர் வி.டி. சதீசன் - பிடிஐ

Updated On :1 மணி நேரம் முன்பு

கேரள முதல்வர் வி.டி. சதீசன் பதவியேற்ற முதல் நாளே அவர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில், வி.டி. சதீசன் முதல்வராக இன்று (மே 18) காலை பதவியேற்றுக் கொண்டார். மேலும், காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 20 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். பின்னர், அம்மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் சதீசன் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, கேரள மாநில தலைமைச் செயலகத்துக்குச் சென்ற முதல்வர் வி.டி. சதீசன் தனது அலுவலகப் பணிகளைத் தொடங்கினார். இத்துடன், முதல்வர் சதீசன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருவதாகவும், இந்தக் கூட்டத்தில் கேரள அரசின் தலைமைச் செயலர் ஏ ஜெயதிலக் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், முதல்வர் சதீசன் பல்வேறு முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அமைச்சரவைக் கூட்டம் முடிவு பெற்றதும் முதல்வர் சதீசன் செய்தியாளர்களைச் சந்தித்து புதிய அரசு எடுத்துள்ள முக்கிய முடிவுகள் குறித்து விளக்கமளிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Summary

cabinet meeting led by Kerala CM VD Satheesan is currently underway, taking place on the very first day of his assumption of office.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.